இவ்வூரிலுள்ள செங்கழுநீர் ஓடைக்கருகில் ஒரு பெரிய புற்றும், அதனருகே ஜடாமுனீஸ்வரர் தமது பரிவாரங்களுடன் எழுந்தருளியிருப்பதும் ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளின் கனவின் மூலமாக தெரிய வந்தது. ஸ்வாமிகளின் கனவில் தோன்றிய சீதாராமன் தாம் இந்த புற்றுக்குள் இருப்பதாக தெரிவித்தார். மறுநாள் அந்த புற்றை தோண்டச் செய்தார் ஸ்வாமிகள். அதற்குள் இருந்த ராமர் - சீதை - லட்சுமணர் - ஹனுமன் சிலைகளை வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து கோயிலெழுப்பினார்கள் என ஸ்தல வரலாறு.
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் (திருப்புவனூர்)
Primary Deity
ஸ்ரீ கோதண்டராமர்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
தஞ்சாவூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சீதா தேவி, லட்சுமணன், ஹனுமன் ஆகியோர் உடன் உள்ளனர். வரதராஜப் பெருமாள், வேணுகோபாலன், லட்சுமி நாராயணர், ஸ்ரீநிவாசர் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம். அருகிலேயே ஜடாமுனீஸ்வரருக்கு கோயில் எழுப்பி உள்ளனர். விபூதி பிரசாதம் தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.