சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமணக் காட்சியைக் காண காஞ்சிபுரம் வந்த ரிஷிகளும், முனிவர்களும் தத்தம் நித்ய பூஜை அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க அமைதியான இடம் தேடினார்கள். காஞ்சிபுரத்தில் கூட்டமாக இருந்ததால், சற்றுத் தள்ளி வந்து இத்தலத்தில் அமர்ந்து வழிபாடுகளை நடத்தினர் என ஸ்தல வரலாறு. ஆறு ரிஷிகள் வெவ்வேறு இடங்களில் தங்கி பூஜைகளை மேற்கொண்டனர். இந்த ஆறு இடங்களை உள்ளடக்கிய வனப் பகுதிகளுக்கு, ஷடாரண்யம் எனப் பெயர். தமிழில் ஆற்காடு என்பர். ஷடாரண்ய க்ஷேத்திரங்களில் வழிபாடுகள் செய்து கொண்டிருந்த சப்தரிஷிகளின் சீடர்கள், ஆற்காட்டின் அருகேயுள்ள சாத்தூர் எனுமிடத்தில் தங்கிக்கொண்டு, ரிஷிகளுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தனர் என ஸ்தல வரலாறு. (சாத்தூரிலுள்ள சிவாலயத்தில் பாணலிங்கேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.) எல்லாவிதமான மூலிகைகளும் கொண்ட நவலட்சணவனம் இருந்ததால் இவ்வூருக்கு நாவ்லாக் என்ற பெயரும் இருந்தது.
அருள்மிகு காஸ்யபேஸ்வரர் திருக்கோவில் (நாவ்லாக்)
Primary Deity
காஸ்யபேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலவர்: காஸ்யபேஸ்வரர், அம்பாள்: பர்வதவர்த்தினி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் காஸ்யபேஸ்வரர். காசியில் காணப்படுவதைப் போலவே இங்கும் பள்ளத்திற்குள் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். சுயம்பு லிங்கம். காஸ்யப முனிவர் வழிபட்டதால் இறைவனுக்கு காஸ்யபேஸ்வரர் என்று பெயர். அம்பாள் பர்வதவர்த்தினி மிகுந்த வரப்பிரசாதி என்பர். காஸ்யப கோத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய ஸ்தலம். காஸ்யப முனிவரின் உருவத்தை கல்வெட்டில் செதுக்கி வைத்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.