அருள்மிகு கார்வானப் பெருமாள் திருக்கோவில், காஞ்சிபுரம்

Primary Deity
ஸ்ரீ கார்வானர்
Temple Type
108 திவ்ய தேசம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

'கார்' என்பது மேகத்தைக் குறிக்கும் சொல். மேகத்தை ஒத்திருப்பதாலும், மேகம் மழையைப் பொழிவது போல் சேவார்த்திகளுக்கு கருணையைப் பொழிவதாலும் 'கார்வானர்' எனும் திருநாமம் கொண்டார். "கார்வானத்துள்ளாய் கள்வா" என்ற பாசுரப்படி, கார்மேகம் சூழ்ந்த வானத்துள் இருக்கும் எம்பெருமான் என்பதால் 'கார்மேகத்தான்' என்றாகி பின்னர் 'கார்வானர்' ஆகியிருக்கலாம் என்று கூறுவர். பார்வதி தேவிக்கு தன் அண்ணன் செய்த குறும்புகளையும், கள்ளத்தனங்களையும் காண ஆசை வந்தது. தான் பாலகிருஷ்ணனாக இருக்கும்போது செய்த கள்ளத்தனங்களை எல்லாம் தங்கைக்காக இத்தலத்தில் செய்து காட்டியமையால் 'கள்வர்' என்ற பெயர் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மகாபலி சக்ரவர்த்தி நடத்தவிருக்கும் யாகத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துவிட்டால் அவன் இழந்ததை எல்லாம் மீண்டும் பெற்றுவிடக் கூடும் என அஞ்சிய தேவர்கள், அவனது யாகத்திற்கு தண்ணீர் கிடைக்காது செய்துவிட்டனர். வாமனரைச் சரணடைந்தான் மகாபலி. வாமனருளால், நீர் நிறைந்த மேகக்கூட்டங்கள் மேலே எழும்பின. கொட்டித் தீர்த்தது மழை. தனக்குக் கிடைத்த இந்த கார்வானரின் தரிசனம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என மகாபலி பிரார்த்தித்ததால், இத்தலத்தில் கார்வானராக இருப்பதாக ஸ்தல வரலாறு. இங்குள்ள நான்கு திவ்ய தேசங்களில், இத்தலத்து பெருமாளையும் சேர்த்து பாடியுள்ளார் ஆழ்வார்.

மூலவர்: ஸ்ரீ கார்வானர்் தாயார்: ஸ்ரீ கமலவல்லி. மூலஸ்தானத்தில் ஸ்ரீ கார்வானர் மூலவராக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். வடக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலம். கார்வானக்கள்வர், நவநீதசோரன் ஆகிய திருநாமங்களும் உண்டு. பார்வதி தேவிக்கும், கார்க்கிய முனிவர்க்கும் பிரத்யட்சமானதாக ஐதீகம். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தாயார் ஸ்ரீ கமலவல்லியை, தாமரையாள் என்று போற்றுவர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...