சிவபெருமானின் கோபத்திற்காளான பிரம்மதேவர் தனது பதவியை இழந்தார். பின்னர் இத்தலம் வந்து நீண்ட காலம் தவமிருந்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இவ்விறைவனை தரிசிக்கும் பாக்கியம் தனக்கு கிட்டவில்லையே என வருந்திய ஒரு குருட்டுப் பெண்ணுக்கு, இறைவன் கண் பார்வையைத் தந்து தரிசனமும் அளித்ததாக ஸ்தல வரலாறு.
கமலாலயத்தில் நீராடுவோர் இந்திரன் ஆகும் பேறு பெறுவதைக் கண்டு, அக்குளத்தைத் தூர்த்துவிடக் கூறிய பாவம் நீங்க இந்திரன் கண்ணாயிர நாதரை வழிபட்டான். பதஞ்சலி முனிவர்க்கு ஏழு வகை தாண்டவங்களை காட்டியருளிய இறைவன்.
கண்ணாயிர நாதருக்கு தைல அபிஷேகம் செய்து, தேனில் ஊற வைத்த அத்திப்பழங்களை நைவேத்தியம் செய்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விரைவில் குணமாகும் என்பர்.
ஆதியில் கருப்பு அகில் மரங்கள் மிகுந்து காணப்பட்டதால் கார் அகில் என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி காராயில் என்றானது. தற்போது திருக்காரவாசல் எனப்படுகிறது.