மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோவில் (1178-1216). தனது வடநாட்டுப் போரின் வெற்றிக்கு அடையாளமாக, தாராசுரத்துக் கோவிலைப் போலவே கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவர்களிடம் போரில் தோற்ற திரிபுராதிகள் எனப்படும் மூன்று அசுரர்கள், சிவபெருமானைக் குறித்து தவமிருந்து பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களாலான, வானத்தில் பறக்கும் கோட்டைகளை வேண்டிப் பெற்றார்கள். இதனால் இவ்வூருக்கு 'திரிபுவனம்' எனப் பெயர் வந்தது.
வரகுணப் பாண்டியனைப் பிடிக்கக் காத்திருக்கும் பிரம்மஹத்தியினால், அவன் கொண்ட பயத்தையும், நடுக்கத்தையும் தீர்த்து வைத்த இறைவன் இங்கு மூலவராக இருப்பதால், இவருக்கு 'கம்பகரேசுவரர்' எனப்படும் 'நடுக்கம் தீர்த்த நாயகர்' என்ற பெயர் வந்தது.
இரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் ஆவேசம் அடங்காமல் உக்ர வெறியோடு இருந்தார். இதனால் கலக்கமுற்ற தேவர்கள் சிவபெருமானது உதவியை நாடினார்கள். நரசிம்மமே நடுங்கும்படியான உக்கிர சரபேஸ்வர வடிவம் கொண்டு, நரசிங்கத்தின் ருத்ர சக்தியை ஆகர்ஷித்துக் கொண்டார் எனப் புராண வரலாறு கூறுகிறது. தேவர்களின் நடுக்கத்தைத் தீர்த்து வைத்ததால் 'நடுக்கம் தீர்த்த நாயகர்' எனப் பெயர்.
தேவார வைப்புத்தலம்.