புத்திர பாக்கியம் வேண்டி நின்ற நந்த சோழ மன்னனின் மகளாக அவதரித்த திருமகள், கமலவல்லி எனும் பெயரில் வளர்ந்து வந்தாள். திருமண வயது வந்ததும் அவள் விரும்பியபடியே அரங்கநாதனுக்கு மணம் முடித்து வைத்தான் அரசன். சகல சீர் வரிசைகளுடன் ஸ்ரீரங்கம் சென்ற கமலவல்லி, ஆலய கர்ப்பக்ரஹத்துக்குள் பிரவேசித்ததும், அரங்கனின் திருமேனியுடன் ஐக்யமாகி விட்டாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
உறையூரில் ஒரு கோவிலை நிர்மாணித்து அதில் அரங்கனை அழகிய மணவாளனாக எழுந்தருளச் செய்தான் நந்த சோழ மன்னன் என ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
திருப்பாணாழ்வார் நெற்கதிரிலே தோன்றி இங்கு வாழ்ந்து வந்த பாணர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வந்தார். பின்னர் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்டார் எனக் கூறுவர். திருப்பாணாழ்வார் அவதார ஸ்தலம்.
பெருமாள் வடக்கே திருமுக மண்டலம் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே திவ்ய தேசம் இதுதான் என்பர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.