அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் திருக்கோவில் (கல்லங்குறிச்சி)

Primary Deity
வரதராஜப் பெருமாள்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available

உடையார்பாளையத்தைச் சேர்ந்த சிதளவாடி எனும் கிராமத்தில் வசித்த கோபால படையாச்சியின் மகன் மங்கான், தெய்வபக்தி மிக்கவர். அவருக்குச் சொந்தமான பசுக்கள் அருகிலுள்ள கானகத்தில் மேயச் செல்வது வழக்கம். அவற்றுள் கருத்தரித்த ஒரு பசு திரும்பிவரவேயில்லை. பசுவை பல நாட்களாகத் தேடி அலைந்தார் மங்கான். அந்தப் பசு மாவிலங்க மரத்தடியில் இருப்பதாக ஒரு சித்தர் மங்கானின் கனவில் தோன்றி கூறியதால், அப்பகுதியைத் தேடிச் சென்றார் மங்கான். அங்கு பூமியில் பாதி புதைந்தும் பாதி வெளிப்பட்டும் ஒரு கற்கம்பம் இருந்தது. மங்கான் தேடி வந்த பசு, அந்தக் கற்கம்பத்தின் மீது பாலைப் பொழிந்து கொண்டிருந்தது. அந்தக் கற்கம்பத்தின் தெய்வீக சக்தியை சித்தர் வாயிலாக அறிந்து கொண்ட மங்கான், அதைப் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

கலியுக வரதராஜர் மூலஸ்தானத்தில் கற்கம்ப வடிவில் எழுந்தருளியுள்ளார். 12 அடி உயர கற்கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கிப் பிடித்திருப்பதைப் போல காட்சி தருகிறார். மூலவரின் வலதுபுறமாக, வடக்குமுகமாக ஒரு அனுமன் கொடி உள்ளது. நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் பெருமாளை சேவித்த பக்தர்களுக்கு, இங்கு வித்தியாசமாக கற்கம்பமாக சேவை சாதிக்கின்றார். இவருக்கு சங்கவனப் பெருமாள், திருக்கம்பப் பெருமாள், பால் குளித்த பெருமாள் போன்ற திருநாமங்களும் உண்டு. அலர்மேல் மங்கைத் தாயார் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தசாவதார மண்டபத்தின் தூண்களில் திருமாலின் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. உற்சவ மூர்த்திகளைத் தனி சந்நிதியில் சேவிக்கலாம். பெரிய கண்டாமணியுடன் கூடிய மணிமண்டபம் உள்ளது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...