தட்சன் தன்னுடைய 27 பெண்களை சந்திரனுக்கு மணமுடித்து வைக்கின்றார். (அஸ்வினி முதல் ரேவதி வரை) ்
அவர்களுள் ரோஹிணியிடம்மட்டுமே சந்திரன் பிரியமாக இருந்தான். மற்ற பெண்கள் தந்தையிடம் சென்று ்
முறையிட்டதால் சந்திரனை சபிக்கின்றார் தட்சன். சாபத்தால் ஒளியிழந்து தேயலானான் சந்திரன். இத்தலத்திற்கு ்
வந்து இவ்விறைவனை வழிபட்டு தன் சாபத்தை போக்க்ிக் கொண்டான் சந்திரன் என ஸ்தல வரலாறு
திங்கள் எனப்படும் சந்திரன் இவ்விறைவனை வழிபட்ட ஊர் என்பதால் திங்களூர் எனப் பெயர் கொண்டது. பிறையை ்
சூடிய இறைவன் என்பதால் திங்களூர் என்ற பெயர் வந்தது.
திருநாவுக்கரசரின்  ்சிவபக்தி - சிவத்தொண்டு ஆகியவற்றை கேள்விப்பட்டு, இவ்வு+ரைச் சேர்ந்த அப்பு+தி அடிகள்  ்
என்பவர் அவர் பெயரில் மடம், சத்திரம், தண்ணீர்பந்தல், குளம், வீதி, கோசாலை ஆகியவற்றை ஏற்படுத்தினார். ்
தாம் காணும் காட்சி எல்லாம் திருநாவுக்கரசரே என எண்ணினார் அப்பு+தி அடிகள் . அவ்வளவு பக்தி. ்
அப்பு+தி அடிகளார் திருநாவுக்கரசரை பார்த்தது கூட கிடையாது. அப்பு+தி அடிகள் தமது மகனுக்கு திருநாவுக்கரசரின் ்
பெயரையே சூட்டினார். ்
க்ஷேத்ராடனம் மேற்கொண்டிருந்த திருநாவுக்கரசர் இத்தலம் வந்தபோது, இவற்றையெல்லாம் பார்த்து விட்டு, தம் பெயரில் ்
இவ்வளவு தர்ம ஸ்தாபனங்களை நடத்தும் பக்தனைக் காண விரும்பி அவரது இல்லத்திற்கு சென்றார்.
அப்பு+தி அடிகளை சந்தித்ததும் முதல் கேள்வியாக, இவற்றிற்கெல்லாம் தங்களது பெயரை வைக்காமல் யாரோ முன்பின் ்
தெரியாத திருநாவுக்கரசர்் பெயரை ஏன் வைத்தீர்கள்? என்று கேட்டார். சைவத்திற்கே பெருமை தேடித் தரும் மஹானை ்
தாழ்த்திப் பேசியதை அபு்பு+தி அடிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..நீங்கள் யார்? எனக் கேட்டார். ்
நீவிர் புகழ்ந்து பேசும்  ்திருவாவுக்கரசர் நான்தான்..என்று பெரியவர் கூறியதும் உணர்ச்சி வசப்பட்ட அப்பு+தி அடிகள் ்
ஆனந்தம் கொண்டார். அவரை அமுதுண்ணஅழைத்தார்.
துணைவியாரை சமையல் செய்யச் சொல்லி விட்டு, மூத்த மகன் திருநாவுக்கரசை வாழை இலை பறித்து வருமாறு ்
பணித்தார். தோட்டத்தில் இலை பறிக்கச் சென்றவனை பாம்பு தீண்டி விட்டது. மகனின் மரணச் செய்தி, பெரியவர் ்
உணவருந்துவதை தடுத்து விடும், விருந்தோம்பலுக்கு பங்கம் வந்துவிடும் என நினைத்த அப்பு+தி அடிகளும் அவரது ்
துணைவியாரும், மகன் மறைந்ததை  ்மஹானிடம் மறைக்கின்றனர்.
அமுதுண்ண அமர்ந்த பெரியவர், எல்லோருக்கும் திருநீறு வழங்கி விட்டு, என் பெயர் கொண்ட உங்கள் மகனை ்
கூப்பிடுங்கள் என்றார். இப்போது இங்கு வரமாட்டான் எனக் கூறி சமாளித்தனர் தம்பதியினர். பெரியவர் ்
விடுவதாயில்லை..மீண்டும் வற்புறுத்தினார். நடந்ததை சொல்ல வேண்டிய கட்டாயம் எற்பட்டதால் சொல்லி விட்டனர்.
திருநாவுக்கரசர் ஒன்று கொலாம் என்ற பதிகத்தைப் பாடி இறைவனின் கருணையை வேண்டினார். விடம் தீர்த்த ்
திருப்பதிகம் பாடி முடித்ததும், சிவபெருமான் அருளால் இறந்தவன் பிழைத்து எழுந்தான். அப்பு+தி அடிகளும் தனது ்
மனைவி மற்றும் மகனோடு திருநாவுக்கரசருக்கு அமுது படைத்து மகிழ்ந்தார் என ஸ்தல வரலாறு.
நாயன்மார்களுள ்ஒருவரான அப்பு+தி அடிகள் வாழ்ந்து முக்தியடைந்த ஸ்தலம். நவகிரகங்களுள் சந்திரனுக்குரிய ்
ஸ்தலம். வில்வம், வாழை என இரண்டு ஸ்தல விருட்சங்களைக் கொண்ட ஸ்தலம்..
அப்பு+தி அடிகளின் மகன் வாழை இலை பறிக்கப் போன இடத்தில் பாம்பு கடித்து,  ்இறந்து போனதும், பின்னர் ்
திருநாவுக்கரசர் விடந்தீர்த்த பதிகம்பாடி உயிர்ப்பிக்க வைத்ததையும் நினைவு கூற வாழைமரம் ஸ்தல விருட்சமாக ்
உள்ளது போலும்.
அசுவினி, மிருகசீரிஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திர தினங்களில் சந்திர ்
ஹோரை வேளையில் வெள்ளிக் கிண்ண்த்தில் பால், தேன், நெய், சாதம் கலந்து சந்திரனையும் பசுவையும் ்
காண்பித்து குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்தால் ஜலதேவதை மற்றும் ஒளஷத தேவதையின் அருள் ்
குழந்தைகளுக்கு கிடைக்கும். எனவே அன்னப்ராசனத்திற்கு இத்தலம் சிறப்புற்று விளங்குகிறது. ்
தேவார வைப்புத்தலம் - நவகிரக ஸ்தலங்களுள் - சந்திரன் ஸ்தலம்