பிரஹலாதனின் அவதாரமான வியாசராயர் நிறுவிய 732 ஆஞ்சநேய மூர்த்திகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
மீலன் எனும் ஆங்கிலேய துரை ராஜபிளவை நோய் கொண்டு கஷ்டப்பட்டார். இத்தலத்திற்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேர்த்திருவிழா, நரசிம்ம ஜெயந்தி, ஹனுமன் ஜெயந்தி, ஸ்ரீ ராம நவமி, ராகவேந்திரர் ஆராதனை, வைகுண்ட ஏகாதேசி, மத்வ ஜெயந்தி, சீதாராம கல்யாணம் ஆகியனவற்றை சிறப்பாக கொண்டாடுகின்றனர். விடியற்காலையில் ஹரி வாயு ஸ்துதியுடன் ஹனுமன் ஜெயந்தி விழாவை தொடங்கி சிறப்பாக கொண்டாடுகின்றனர். மாத்வ சம்ப்ரதாயப்படி பூஜா முறைகள் இருக்கின்றன.