அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில், செம்பாக்கம்

Primary Deity
ஜம்புகேஸ்வரர்
Temple Type
ஜம்புகேஸ்வரர் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

அமிர்தம் கடையும் பணியில் சிவபெருமான் நஞ்சை உட்கொண்டது ஒரு புராண வரலாறு. அந்தப் பாவத்தைத் தொலைக்க வேண்டி வாசுகி வருந்தியது.

நாவல்வனமாகத் திகழ்ந்த இப்பகுதியில் சிவபெருமான் ஜலஸ்வயம்புவாக எழுந்தருளியிருப்பதாகத் தெரிந்துகொண்டு, இங்கு வந்து இவ்விறைவனை வழிபட்டுத் தோஷங்களைப் போக்கிக்கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

ஸ்ரீ பொன்னம்பல ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ திருமேனிலிங்க ஸ்வாமிகள் எனும் இரட்டை சித்தர்கள், இங்குள்ள அகழி தீர்த்தம் (குளம்) அருகே சமாதியடைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

திருப்போரூர் முருகன் புரிந்த போரில் துண்டிக்கப்பட்ட அசுரனின் சிரம் விழுந்த இடம் 'சிரம் பாகம்' எனப் பெயருற்று, பின் மருவி 'சிரம்பாக்கம்' என்றாகி தற்போது 'செம்பாக்கம்' என்றானதாகக் கூறப்படுகிறது.

மூலவர்: ஜம்புகேஸ்வரர், அம்பாள்: அழகாம்பிகை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக ஜம்புகேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இது ஒரு ஜலஸ்வயம்பு மூர்த்தம்.

கிழக்கு நோக்கிய சந்நிதி. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் அழகாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.

மூலஸ்தானத்தின் இடப்பக்கமாக செல்வ கணபதியும், வலப்பக்கமாக வள்ளி-தேவசேனா சமேத முருகனும் காட்சி தருகின்றனர். இங்குள்ள முருகனை வழிபடுவோர்க்கு எல்லா தோஷங்களும் விலகும் எனக் கூறுவர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...