தேவர்களும், நந்தக முனிவரும் ஒன்று கூடி வழிபட்ட ஸ்தலம் என்பதால் திருக்கூடல் எனப் பெயர் பெற்றது.
விஷ்ணு பக்தனான அம்பரீஷன், விஷ்ணு பூஜையில் லயித்திருந்தபோது துர்வாச முனிவர் வந்ததை கவனிக்கத் தவறிவிட்டான். இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் அம்பரீஷனை சபிக்க முற்பட்டார். விஷ்ணுவிடம் சரணாகதி அடைகிறான் அம்பரீஷன். விஷ்ணு சக்கரம் துர்வாசரைத் துரத்த ஆரம்பித்தது. பின்னர் முனிவர் தன் தவறை உணர்ந்து, பிழை பொறுத்தருள வேண்டுகிறார். பெருமாளும் மன்னிக்கிறார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஐந்து உற்சவ திருமேனிகளை வைத்து பஞ்சபேர விதானம் என்ற விதிப்படி நித்ய வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இத்தலத்திலுள்ள விருட்சமான பலா மரம் 300 வருடங்கள் பழமையானது. இதில் சங்கு போன்ற வடிவம் இயற்கையாகவே தோன்றியுள்ளது.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று.