ஒரு முறை தரிசித்தவர் மனதிலிருந்து நீங்காமல் இருக்கும் தியானலிங்கம். தரிசிப்போர்க்கு ஆற்றலையும், அதிர்வினையும் தரத்தக்கது. இது ஆன்மீக அறிவியலை வழங்கும் மையம்.
தினமும் முற்பகல் 11.50 முதல் 12.10 வரையிலும், மாலை 5.50 முதல் 6.10 வரையிலும் நாத ஆராதனை நடத்துகின்றனர். இது தியான லிங்கத்தின் அதிர்வுகளை நாம் பெறுவதற்கு உதவும் ஆராதனை ஆகும். மதியம் 12.30 மணி முதல் பகல் 1.15 மணி வரை ஓங்கார தீட்சை எனும் தியான பயிற்சி, விருப்பமுள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
அமாவாசை, பௌர்ணமி, மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி நாட்களில் விசேஷ ஆராதனைகள் சிறப்புற நடைபெறுகின்றன. அமாவாசை - பௌர்ணமி நாட்களில் வருபவர்கள், தங்கள் கரங்களினாலேயே பாலும், மலையருவி நீரும் அர்ப்பணிக்கலாம்.
காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரை பாலும், மதியம் 1.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மலையருவி நீரும் அர்ப்பணிக்கலாம்.
நந்தவனம், சாதனா ஹால் ஆகிய வசதிகள் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ளன. மொபைல், கேமரா, பாதணிகள் ஆகியவற்றை உரிய இடத்தில் ஒப்படைத்து விட்டு வளாகத்திற்குள் செல்ல வேண்டும்.