வணிகன் ஒருவன், கரும்புகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு இவ்வூர் வழியே இரவு நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். அருகேயுள்ள குளக்கரையில் வண்டியை நிறுத்திவிட்டு, குளத்தில் கை கால்கள் சுத்தம் செய்து விட்டு திரும்புகையில், பாலகனான வந்த சாஸ்தா, சிறு கரும்பு துண்டு ஒன்றை தருமாறு கேட்டார்.
இவைகள் கரும்புகள் இல்லை - வெறும் நாணல்களே என பொய்யுரைத்தான் வணிகன். மறுநாள் அவன் சந்தைக்கு போய் சேர்ந்ததும் வண்டியிலுள்ள சரக்கை இறக்க முற்பட்டபோது, அவை நாணல்களாக இருப்பது கண்டு பயந்து, அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்த வணிகன், சுவாமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, 1000 கரும்புகளை கொண்டு பந்தலிடுவதாக வேண்டிக் கொண்டான். நாணல்கள் மீண்டும் கரும்புகளாக மாறின. இதனால் கரும்பாயிர சுவாமி என்ற பெயர் கொண்டார்.