அம்புகளைக் கொண்டு கட்டும் பாலமே உறுதியானது என்று அர்ஜுணன் வாதிட, வானர சேனைகள் கட்டிய பாலமே உறுதியானது என ஹனுமன் தர்க்கம் செய்தார். இருவரும் போட்டி பந்தயத்தில் இறங்க, அர்ஜுணன் அம்புகளை தொடுத்து பாலத்தை உருவாக்கினான். ஹனுமன் கட்டைவிரலால் அதை அழுத்தி உடைத்து விட்டார். அர்ஜுணன் தோற்றுப் போனதால் பந்தயப்படி அக்னிபிரவேசம் செய்ய முற்பட்டான். முதியவர் ஒருவர் திடீரென அங்கு வந்து அர்ஜுணனை தடுத்து மீண்டும் ஒரு முறை அம்புப்பாலம் கட்டச் சொன்னார். ஹனுமன் முழுபலத்தை பிரயோகம் செய்தும் இம்முறை பாலத்தை உடைக்க முடியவில்லை. விஷ்ணு சக்கரம் தாங்கி நின்றது. அந்த முதியவர் அர்ஜுணனுக்கு கிருஷ்ணராகவும், ஹனுமனுக்கு ராமராகவும் காட்சி தந்தார். அவரே கோபிநாதப் பெருமாளாக இங்கு சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு. திரௌபதி ஆசையுடன் கேட்ட ஆயிரம் இதழ் தாமரை மலரைக் கொண்டு வர பீமன் இங்கு வந்ததாகவும் ஹனுமனுடன் தர்க்கம் செய்ததாகவும் கூறுவர். அந்த அதிசய மலர் கோவில் தடாகத்தில் உள்ளது. ஆண்பனை, பெண்பனை ஸ்தல விருட்சங்கள் இங்கு உள்ளன. இவற்றை விவாஹப்ராப்தி வேண்டி வழிபடுகின்றனர்.
அருள்மிகு கோபிநாதப் பெருமாள் திருக்கோவில் (பட்டீஸ்வரம்)
Primary Deity
கோபிநாதப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக கோபிநாதப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் ராமாநுஜர், மதுரகவி ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம். தீர்த்தக் கிணற்றின் அருகேயுள்ள சந்நிதியில் எழுந்தருளியுள்ள இரட்டை ஆஞ்சநேயர்கள் மிகுந்த வரபிரசாதி. ஆயிரம் இதழ்கள் கொண்ட அபூர்வ தாமரை மலரை உடலில் தாங்கியுள்ளார். வாலில் மணி காணப்படுகிறது. மூலவராக கல்யாண ராமரும், உற்சவராக கோதண்ட ராமரும் சேவை சாதிக்கும் ஸ்ரீ ராமர் கோவில் ஒன்றும் இவ்வூரிலுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.