அருள்மிகு கங்கையம்மன் திருக்கோவில், சந்தவாசல்

Primary Deity
இல்லை
Temple Type
Amman Temples
Location
புதுக்கோட்டை
Contact Number
+91-Not Available

சிவபெருமானை அழைக்காமல் தட்சன் நடத்திய யாகத்தால் வருத்தமுற்ற தாட்சாயினி, தட்சனைக் கண்டிக்க அவனது இடத்திற்குச் சென்று அவமானப்பட்டாள். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் ஆவேசத்துடன் பூலோகம் வந்து, தனது இடது பாதத்தைப் பதித்த இடம் ராஜ கம்பீர மலை. சிவனாரது பாதம் பட்ட இந்த மலைக்கு மிதிமலை என்று பெயர். உக்கிரமாகப் பாதத்தை வைத்தவுடன் மலை பற்றிக்கொண்டு எரிந்தது. இந்த நிகழ்வுகளால் கங்கா தேவி பாதிக்கப்பட்டாள். கங்கா தேவிக்கு உதவ வந்த திருமால், ஏழு நீர்நிலைகளை உருவாக்கி, நெருப்பையும் அணைத்து, சிவனாரின் உக்கிரத்தையும் தணிக்க உதவினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. விஜயநகரத்தைச் சேர்ந்த குமாரகம்பணனுக்கும், இப்பகுதியை ஆண்ட ராஜ்நாராயணன் எனும் சிற்றரசனுக்கும் நடந்த போரில், ராஜ்நாராயணன் தோற்கடிக்கப்பட்டு, பின்வாங்கி ஓடினான். போரில் வென்ற தேசத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்தான் குமாரகம்பணன். 'சேனைக்கு மீண்டான் வாசல்' எனப் பெயர் கொண்ட இவ்வூர் தற்போது சந்தவாசல் என அழைக்கப்படுகின்றது.

மூலஸ்தானத்தில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தரும் கங்கையம்மன் மிகுந்த வரப்பிரசாதி. பஞ்சநாக கிரீடமும், சர்வ ஆபரணங்களும் அணிந்து, சந்திரன் போல் பிரகாசிக்கும் திருமுகம் கொண்டும், சாந்த ஸ்வரூபியாக காட்சி தருகின்றாள். சிவபெருமானின் சிரசில் குடி இருக்கும் கங்கா மாதாவே இந்த கங்கையம்மன் என்கின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...