துளசி மகாராஜன் என்பவன் தனக்கு வந்த குஷ்ட நோயைப் போக்கியருளும்படி இறைவனை வேண்டினான். எழுமுள் எனப்படும் ஒரு வகை முள்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த ஸ்தலமான தளிக்குளம் சென்று வழிபடுமாறு அவனது கனவில் தோன்றிய இறைவன் கூறினார். இவ்வூருக்கு வந்த துளசி மகாராஜன் கோயில் ஒன்றையும் குளம் ஒன்றையும் அமைத்தான். இதனால் கோயிற்குளம் எனப் பெயர் கொண்டது இவ்வூர். இவ்விறைவன் அருளால் அவனது குஷ்ட நோயும் நீங்கப் பெற்றது என ஸ்தல வரலாறு கூறுகிறது.
துளசி மகாராஜனின் மகன் இங்குள்ள குளத்தில் நீராடி தாமரைத்தண்டு திரிகளால் விளக்கேற்றி இவ்விறைவனை வழிபட்டமையால் அவனுக்குப் புத்திர பாக்கியம் கிட்டியது. இதனால் இக்குளத்திற்கு புத்ராங்கன் குட்டை எனப் பெயர் வழங்கலாயிற்று.
தேவார வைப்புத்தலம்.