அருள்மிகு ஏகாந்த ராமர் திருக்கோயில் (தங்கச்சி மடம்)

Primary Deity
ஸ்ரீ ராமர்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
கடலூர்
Contact Number
+91-Not Available

சேது பந்தனம் செய்யும் முன்னர் ஸ்ரீ ராமர் வானர சேனைகளுடன் ஆலோசனை நடத்திய இடம். ராவண வதம் முடித்து திரும்பும்போது ஸ்ரீ ராமர் சீதா பிராட்டியுடன் ஏகாந்தமாக கோயில் கொண்ட இடம். கோயிலின் முன்பாக உள்ள கடலில், அலைகளோ இரைச்சலோ இல்லாமல் சாந்தமாக உள்ளது. ஸ்ரீராமர் வானரங்களுடன் ஆலோசனை நடத்தியபோது அலைகளின் பேரிரைச்சலால் ஒருவர் பேசுவதும் காதில் விழவில்லை. கடலரசனை ராமர் திரும்பிப் பார்த்தார். தனது ஆரவாரத்தை முடக்கிக் கொண்டது கடல் என ஒரு குறிப்பு கூறுகிறது.

மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ ராமர் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வலக் கரத்தில் அம்பைப் பிடித்தவாறும், இடக்கரம் வில்லேந்தியும் காட்சி தருகின்றார். வலப்பக்கமாக சீதா தேவி காட்சி தருகின்றாள். (பெரும்பாலும் இடப்புறமாக காணப்படுகிறவள்) நான்கடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடைய ராமரும், சற்று உயரக் குறைவாக லக்ஷ்மணனும், அதை விட சற்று உயரக் குறைவாக திரிபங்கி நிலையில் சீதையும் காணப்படுகின்றனர். கருவறையின் வெளிப்புறம் விநய மூர்த்தியாக ஆஞ்சநேயர் வாய் பொத்திய நிலையில் பெரிய கல் விக்ரகமாக சேவை சாதிக்கின்றார். தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள ஸ்படிக லிங்கம் - ஒரு பீடத்தின் மீது ஆவுடையாரின் நடுவில் உள்ளது. கற்பூர தீபாராதனையின்போது, லிங்கத்தின் பின்பறமாக ஆரத்தி காண்பித்தால் முன்புறம் ஜோதியாகப் பிரகாசிக்கும். மீண்டும் மீண்டும் தரிசிக்கத் தூண்டும் அற்புத லிங்கம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...