தூமம் என்றால் ராஹு மற்றும் கேது இரண்டும் சேர்ந்த உருவம். ஷோடஸ (16) கணபதிகளுள் ஓன்பதாவதாக இருப்பவர் தூமகேது. இந்த கணபதிக்கு மஞ்சளால் உருவான பொருட்கள் மற்றும்மஞ்சள் இவற்றால் பூஜை செய்தால் திருமணத் தடை விலகும் என்பார்கள். ஒவ்வொரு சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்றும் (சுக்ல சதுர்த்தி) காலை 7.00 மணி அளவில் சந்தான கணபதி ஹோமம் நடத்துகின்றனர். வலம்புரி சங்கு கொண்டு அபிஷேகம் செய்வார்கள். இதை செய்பவர்களுக்கு புத்திர பாக்யம் கிடைக்கும். வல்லபை தேவியுடன் திருக்கல்யாண உற்சவம். அரசு மற்றும் வேம்பு விருட்சங்களுக்கு திருமணம் நடத்தி வைக்கின்றனர். சப்த மாதர்கள் நாக உருவில் அமைந்துள்ள அரசமரத்து மேடை.
அருள்மிகு தூமகேது விநாயகப் பெருமான் திருக் கோவில் (திருநீர்மலை)
Primary Deity
தூமகேது விநாயகப் பெருமான்
Temple Type
Vinayagar Temples
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ளார் தூமகேது விநாயகப் பெருமான்அழகான திருவுருவம். இவரது திருமேனியில் நவக்ரஹங்கள் குடி கொண்டுள்ளன. உற்சவ மூர்த்தியின் திருமேனியும் மிகவும் அழகாக இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.