்
 ்
 ்
 ்
மூலவர்: ஸ்ரீ தாத்ரீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ பூங்குழலி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் ஸ்ரீ தாத்ரீஸ்வரர். 'தாத்திரி' என்றால் 'நெல்லி' என்று பொருள். இவருக்கு 'ஸ்ரீ நெல்லீஸ்வரர்' என்கிற திருநாமமும் உண்டு.
அம்பாள் ஸ்ரீ பூங்குழலி தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். 'பிரசூன குந்தளாம்பிகை' என்ற திருநாமமும் உண்டு.
பிரகார வலச்சுற்றில் - ஆதி சங்கரர், சரஸ்வதி, மஹாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. மூக்கணாங்கயிறு இல்லாத நந்தி சாந்தமாக உட்கார்ந்திருக்கின்றது.
த்வஜஸ்தம்பத்தில் காணப்படும் சிற்பங்களில் ரிஷாபாரூடரின் சிற்பம் கண்ணைக் கவர்கின்றது. விதானத்திலும், தூண்களிலும் அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன.
தூண்களில் - படுக்கை ஜடாமுடி சித்தர் மற்றும் பிராண தீபிகா சித்தர் ஆகிய சித்தர்களின் அழகிய வடிவங்களை தரிசிக்கலாம். இவ்விரு சித்தர்களும் இவ்வாலயத்து நெல்லி மரத்தடியில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.