63 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலைக் குறும்பர் அவதரித்த ஸ்தலம். இங்குள்ள மூலவரை இவர் வழிபட்டு
பூஜித்துள்ளார். சுந்தரரை தனது மானசீக குருவாக ஏற்று, குரு இறைவனின் அம்சம் என்பதனை போற்றி அதன்படி
சிவபெருமானையும் சிவனடியாரையும் ஒருசேர வணங்கியவர். திருவஞ்சைக்களத்தில் ஐராவதத்தின்மூலம்,
சுந்தரர் இறைவனை சென்றடையப் போகிறார் என அறிந்து, அதற்கு ஒரு நாள் முன்பாகவே தன் யோக சக்தியால்
இறைவனோடு கலந்தார்.