அநுசுயாவின் பதிவிரதாதன்மையை சோதிக்க, மும்மூர்த்திகள் செய்த பரிட்சையில், மும்மூர்த்திகளும் தோற்றுப் போய், குழந்தைகளாக வடிவம் பெற்றனர். இந்த மூன்று குழந்தைகளின் இணைந்த உருவமே தத்தாத்ரேயர். தத்தாத்ரேயருக்கு - யது சக்ரவர்த்தி, கார்த்தவீர்யார்ஜுனர் என்ற இரண்டு சீடர்கள் உள்ளனர். கார்த்தவீர்யார்ஜுனனுக்கு மந்திர ஸ்படிக யந்திரம் உள்ள ஒரே இடம், தென்னிந்தியாவில் இங்கு மட்டுமே எனக் கூறப்படுகிறது. இராமாநந்த ஸ்வாமிகளின் கனவில் தோன்றிய தத்தாத்ரேயர் சேங்காலிபுரம் ப்ரஹ்லாத புஷ்கரிணியின் வடகரையில் உள்ள அரசமரத்தின் அருகே கோவில் கட்டுமாறு பணித்தாராம். அதன்படி ஸ்வாமிகள் ஸ்தாபித்த கோவில். ஸ்ரீ ராமாநந்த பிரம்மேந்திர ஸ்வாமிகளின் ஜீவசமாதி இருக்கின்றது. ஒவ்வொரு கார்த்திகை பௌர்ணமியிலும் ஸ்ரீ தத்த ஜெயந்தி கொண்டாடி ஆராதிக்கின்றனர். அப்போது நடக்கும் தொட்டில் உற்சவத்தில் ஸ்ரீ தத்தருக்கு பால் புகட்டி தொட்டிலில் போட்டு வேண்டிக் கொண்டால் புத்ர பாக்யம் கிடைக்கும் என ஐதீகம். தொட்டில் உற்சவம் - வியாழன், வெள்ளி, ஞாயிறு. பாலூட்டும் உற்சவம் - வியாழன், வெள்ளி, ஞாயிறு.
அருள்மிகு தத்தக் குடீரம் (சேங்காலிபுரம்)
Primary Deity
ஸ்ரீ தத்தாத்ரேயர்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
கரூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ தத்தாத்ரேயர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். அழகிய பஞ்சலோக திருமேனி. தத்த பாதுகை, தத்த யந்திரம், குபேர யந்திரம், கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் ஆகிய யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகர் மற்றும் முருகனை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.