சூரபத்மன் சாப விமோசனம் அடைந்து, மயில் உருவம் பெற்று, பின்னர் ஆறுமுகப் பெருமானின் வாகனமாகி, முருகனை பூஜித்து, ஞான உபதேசம் பெற்ற ஸ்தலம்.
இங்குள்ள மூலவரை பிரம்மன் பூஜித்ததால் இவருக்கு பிரம்மபுரீஸ்வரர் என்று பெயர். இந்த சிவலிங்கம் தாருகாவனத்து மகரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம். தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பிரம்மன், சிவ அபராதம் நீங்கப் பெற இவரை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார் என ஸ்தல வரலாறு.
முருகப் பெருமான் போர் முடித்து வரும்போது இவ்விறைவனை வணங்கியதாக ஸ்தல வரலாறு. முருகன் கோவில் என்றே ஊர் மக்கள் அழைக்கின்றனர்.