சிவபெருமானுக்கு  ் ்தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம்  ்எனும் ஐந்து திரு முகங்கள் ்
இருப்பது போல், ப்ரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தனவாம். இதனால் ப்ரம்மன் சிவனுக்கு
நினைத்துக் கொண்டு செருக்கடைந்தார். இதைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவியின் வருத்தம் போக்க, ்
சிவபெருமான் - ப்ரம்மனின ஐந்தாவது தலையைப் கொய்ததாகவும் புராண வரலாறு.
ப்ரம்மனின் தலையை கண்டனம் செய்ததால் கண்டன க்ஷேத்ரம் என்றும் கண்டியு+ர் என்றும் பெயர் கொண்டது ்
இவ்வு+ர். இறைவன் ப்ரம்மசிரக்கண்டீசர் என்றானார். சிவபெருமானின் வீர பராக்ரமங்களை விளக்கும் அஷ்ட ்
வீரட்டானங்களுள் முதன்மையானது. இதன் காரணமாக வீரட்டானம் என்றும் இறைவனுக்கு வீரட்டேஸ்வரர் ்
என்றும் பெயர் வழங்கலாயிற்று.
சிவபெருமானின் பக்தரான சதாதபர் எனும் முனிவர் தினமும்  ்பிரதோஷ நேரத்தில் திருக்காளத்தி சென்று ்
காளத்திநாதரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் காளத்திக்கு போக முடியாமல் ்
கண்டியு+ரிலேயே தங்கும்படி நேரிட்டது. காளத்திநாதரை தரிசிக்க முடியாமல் போனதற்காக சதாதபர் தனது ்
உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டபோது, அங்கு ஒரு வில்வமரம் தோன்றியது. அதனடியில் காளத்தி
நாதராகவே காட்சி தந்தார் சிவபெருமான்.
ஆதிகாலத்தில் எழுந்த கல்ப சூரியன் தனது ஒளி என்றென்றும் குறையாமலிருக்க இங்கு தவம் புரிந்து ்
இவ்விறைவனை வழிபட்டு அருள் பெற்றதாக ஸ்தல வரலாறு. தட்சன் சிவபெருமானை நிந்தித்து சிவ ்
அபராதத்திற்குள்ளானான். இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றான் என ஸ்தல வரலாறு. ்
துரோணாச்சார்யார் இவ்விறைவனை வழிபட்டு புத்ர பாக்யம் பெற்றார். ்
சப்தஸ்தான பல்லக்கு திருவிழாவின்போது ஸ்வாமி இத்தலத்திற்கு வந்து விட்டு திரும்பி செல்லும்போது ்
புளியோதரை/தயிர்சாதம் கட்டிக் கொடுத்தனுப்புவது மரபு என ஊர் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேவாரத்திருத்தலம் - சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று - அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று