அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் திருக்கோவில் (புதுக்கோட்டை)

Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
புதுக்கோட்டை
Contact Number
+91-Not Available

மழை பொய்த்ததால் ஏற்பட்ட பஞ்சம் நீங்க முனிவர்கள் புவனேஸ்வரியை வழிபட்டனர். முனிவர்கள் கோரிய வரங்களை தந்ததால் 'சதா' என்றும், நமது உடலில் உயிர் நிலைக்க உணவுப் பொருட்களை தன் உடலிலிருந்து கொடுத்ததால் 'சாகம்பரி' எனவும் போற்றப்படுகிறாள். ஜகன்மாதா புவனேஸ்வரியின் சக்தியால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீ மாதாவான தேவி, ஹரிஹரபிரம்மாதி தேவர்கள் முதல் அனைத்தையும் படைத்து காத்து ரட்சிப்பவள். லலிதா சஹஸ்ரநாமத்தில் 'ஆப்ரஹ்மகிரீடஜனனி' எனப் போற்றப்படுபவள். 1908ல் சதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமிகளின் சமாதி அமைந்துள்ள அதிஷ்டானமே புவனேஸ்வரியின் அருட் பீடமாக இருக்கின்றது. அதிஷ்டானம் என்பதால் ஆலயத்திற்கு உரிய அமைப்புக்கள் இங்கு இல்லை. சக்தி பீடங்களுள் ஒன்று - ஸ்ரீ சக்கர பீடம். சர்வ சைதன்ய ரூபாம் தாம் ஆத்யாம் சக்தீம் ச தீ மஹி ஹ்ரீங்கார ரூபிணீம் தேவிம் தியோ யோந: ப்ரசோதயாத் (சத்குரு சாந்தாநந்தா ஸ்வாமிகள்)

மூலஸ்தானத்தில் அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி சிலா உருவமாக சிங்காதனத்தில் அமர்ந்த திருக்கோலம் கொண்டு தரிசனம் தருகின்றாள். மாதா ஸ்ரீ புவனேஸ்வரியின் சாந்த ஸ்வரூபம் கண்களையும் மனதையும் விட்டு அகலாது. ஏகாக்ஷர மந்திரத்திற்கு ஓர் வடிவமும், அதன் தந்திர நுட்பமான மேருவும் அமைத்து வழிபடுகின்றனர். ஸ்ரீ சக்கர மஹா மேருவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. உற்சவ அம்பாளின் பஞ்சலோகத் திருவுருவம் தரிசிக்க சந்தோஷம் கிடைக்கின்றது. பராசக்தியின் தசா மஹா வித்யைகளின் ஒரு அம்சமாக திகழும் மாதா புவனேஸ்வரி ஐஸ்வர்யங்களை அளிப்பவள். சந்நிதியின் நேர் எதிரே அஷ்டதசபுஜ (18 கைகள்) துர்கா தேவியின் திருவுருவத்தையும், தசபுஜ உக்கிர காளியின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம். இரண்டுமே மிகப் பெரிய திருவுருவங்கள். 25 தலைகள் கொண்ட சதாசிவர், பஞ்ச முக ஆஞ்சநேயர், பஞ்ச முக ஹேரம்ப மஹா கணபதி, காசி விஸ்வநாதர், குரு தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பிரம்மாண்டமான திருமேனிகளுடன் காணப்படும் பஞ்சமுக ஹேரம்ப மஹா கணபதி மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்கள் பேரெழிலுடன் விளங்குகின்றன. ஆயுதபாணியாக ஸ்ரீ வராஹமூர்த்தி, வீணை வாசிக்கும் பாவனையில் ஸ்ரீ சரஸ்வதி, சிவலிங்கம், விநாயகர், முருகன், பழநி ஆண்டவர், தங்கத்தகட்டில் பொதியப் பெற்ற மஹா மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஸ்ரீ ஐயப்பன் சாஸ்தா மற்றும் 18 சித்தர்களையும் தரிசிக்கலாம். சரஸ்வதி ஞான ரூபமாகவும், மஹாலட்சுமி க்ரியா ரூபமாகவும், மஹாகாளி இச்சா ரூபமாகவும் இருப்பதாக ஐதீகம். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ சத்குரு சாந்தானந்தா ஸ்வாமிகள், ஸ்ரீ ஓம்காரானந்தா ஸ்வாமிகள் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...