்
 ்
 ்
 ்
மூலவர்: போஜராஜேஸ்வரர், அம்பாள்: ஆனந்தவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக போஜராஜேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் ஆனந்தவல்லி எழுந்தருளியுள்ளார்.
நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பாதாள ஈஸ்வரர், விஷ்ணு துர்க்கை, பிரம்மா ஆகிய மூர்த்தங்களை கோஷ்டத்திலும், கால பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை மஹா மண்டபத்திலும் தரிசிக்கலாம்.
இக்கோவிலுக்கு திருப்பணி செய்த மக்களுக்கு மூட்டை மூட்டையாக அரிசி கொண்டு வந்து சாதம் வடித்துப் போட்டதால், இவ்விறைவன் போஜராஜேஸ்வரர் என்ற பெயரையும், ஜடாயுக்கு மோட்சம் கொடுக்க தோன்றியதால் முத்தீஸ்வரர் என்ற பெயரையும் பெற்றார். சாதம் வைக்கும் தொட்டி ஒன்றும் இங்கு உள்ளது.
இக்கோவில் ஹொய்சால மன்னர் வீர சோமேஸ்வரனால் 1253ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஐப்பசி மாத பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.