அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் (ரத்னகிரி)

Primary Deity
பாலமுருகன்
Temple Type
Murugan Temples
Location
செங்கல்பட்டு
Contact Number
+91-Not Available

Information not available.

மலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் வலம்புரி விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் இருவரையும் வழிபட்டு ஆசி பெற்று மலை ஏறிச் செல்கின்றனர். அறுகோண வடிவில் திருக்குளம் உள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து ஒரு நுழைவு வாசல் அமைத்துள்ளனர். அங்கிருந்து வாகனங்களில் செல்ல கொண்டை ஊசி வளைவுகளுடைய ஒரு புதிய பாதை அமைத்துள்ளனர். மலை ஏறிச் செல்பவர்களுக்கு 150 படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். குழந்தை வள்ளியைக் கண்டெடுக்கும் நம்பிராஜன், வேடுவர்களுடன் நம்பிராஜன், யானையிடமிருந்து வள்ளியைக் காப்பாற்றும் கிழவன், ஆறு கார்த்திகைப் பெண்கள் ஆறு குழந்தைகளை கையில் எடுப்பது, தட்சிணாமூர்த்தி போன்ற அரிய சிற்பங்கள் கோபுரத்தை அலங்கரிக்கின்றன. சிறந்த வேலைப்பாடுகளையுடைய அழகிய தேர் வடிவில் கருவறையும், முகப்பு மண்டபங்களும், பெரிய தூண்களும் எண்ணற்ற வண்ண சித்திரங்களைக் கொண்டுள்ளன. முருகனின் திருமணக் காட்சியை சித்தரிக்கும் வண்ண சுதை சிற்பம் மிகவும் அழகாக இருக்கிறது. மூலஸ்தானத்தின் இருபுறமும் 17 படிக்கட்டுகள் உள்ளன. இடப்புறமாக கற்பக விநாயகர் எழுந்தருளியுள்ளார். மூலஸ்தானத்தில் பாலமுருகன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். மலர்ந்த சிரிப்புடன் கூடிய திருமுகத்துடனும், பஞ்சகச்சமாக கட்டிய வேஷ்டியுடனும் தரிசனம் தருகின்றார். அபய, வரத முத்திரைகள் மற்றும் வேலாயுதம் கொண்டுள்ளார். வலதுபுறம் வள்ளியும் இடதுபுறம் தெய்வயானையும் உடன் உள்ளனர். யானை வாகனம் நிற்பது தனி சிறப்பு. உற்சவர் ஆறுமுகனின் எழில்வடிவம் நமது கண்களையும் மனதையும் விட்டு அகலாது. தங்கம், வெள்ளி மற்றும் கிரானைட் ரதங்களில் முருகப்பெருமான் பவனி வர விசாலமான மண்டபங்கள் உள்ளன. கருவறையை அடுத்துள்ள அறையில் பாலமுருகனடிமை சுவாமிகளை தரிசித்து ஆசி பெறலாம். அவரது இயற்பெயர் சச்சிதானந்தம். தங்கரத ஊர்வலத்தை கட்டணம் ஏதுமின்றி பக்தர்களே இழுக்கலாம் என கூறுகின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...