அருள்மிகு அழகு சௌந்தரி அம்மன் திருக்கோவில் (பட்டமங்கலம்)

Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
தஞ்சாவூர்
Contact Number
+91-Not Available

சிவபெருமானே நேரடியாக தோன்றி அஷ்டமா சித்திகளை உபதேசம் செய்ய வேண்டும் என பிடிவாதம் செய்த கார்த்திகைப் பெண்கள், சிவனாரின் சாபத்தைப் பெற்று, கற்பாறைகளாக மாறி, சாப விமோசனம் பெற பட்டமங்கலத்து ஆல மரத்தடியில் தவமிருந்தனர். அவர்களுக்கு உபதேசம் செய்யுமாறு பரிந்துரைத்த உமா தேவியையும் காளியாக மாறும்படி இறைவன் சபித்து விட்டார். அப்படி மாறிய உருவமே நாவல் மரத்தடியில் இருப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. பின்னர், திருவிளையாடல் புரியும் காலத்தில் சுந்தரேஸ்வரராக வந்து சாப விமோசனம் தந்து, நாவலடி காளியை அழகு சௌந்தரியாக்கி ஆட்கொண்டதாக ஸ்தல வரலாறு. சாபத்தால் காளியாக இருந்த காலத்தில் துஷ்ட தேவதைகள் உமா தேவியை நெருங்காதிருக்க, நந்தீஸ்வரரை காவலுக்கு வைத்தார் எனக் கூறப்படுகிறது. மதுரை சொக்கநாதரின் 64 திருவிளையாடல்களுள் 32வது திருவிளையாடல் நிகழ்ந்த ஸ்தலம் என்பர்.

மூலஸ்தானத்தில் அழகு சௌந்தரி அம்மன் மூலவராக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். இவள் மிகவும் சக்தி வாய்ந்தவள். அம்மனுக்கு எதிரே நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாவல் மரத்தடியில் உள்ள சந்நிதியில் நாவலடி காளி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். நாவல் மரப் பொந்திற்குள் நல்ல பாம்பு வடிவில் அம்மன் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...