சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி சாம்பலானவர்கள் அநேகம் பேர். இந்தக் கோபத்தையெல்லாம் அனலாகத் திரட்டி கடலுக்குள் புகுத்தினார் பிரம்மன். இந்தக் கோப அனல் ஜலந்திரன் எனும் அசுர வடிவம் கொண்டது. இந்த அசுரன் பிருந்தை என்பவளை மணந்தான்.
எல்லோரையும் இம்சித்து வந்த ஜலந்திரனை, பிருந்தையின் கற்பின் வலிமை காப்பாற்றி வந்தது. இதனை முறியடிக்க எண்ணிய திருமால், ஜலந்திரனின் வடிவம் கொண்டு பிருந்தையிடம் சென்றார். தனது கற்பைச் சோதிக்க, திருமால் ஜலந்திரனின் தோற்றத்தில் வந்திருப்பதைப் புரிந்து கொண்ட பிருந்தை, தீ மூட்டி அதில் வீழ்ந்து உயிர் நீத்தாள். இவளது சாம்பலில் கலந்தார் திருமால். பிருந்தை
திருமால் இல்லாமல் வருந்திய மகாலட்சுமி, பார்வதியின் யோசனைப்படி இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டாள்.
பிருந்தையின் சாம்பலில் சிவன் கொடுத்த துளசி விதைகளை திருமால் தூவினார். அதிலிருந்து தோன்றிய துளசியை மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டார் திருமால்.
லட்சுமியே சிவபெருமானை வழிபட்ட ஸ்தலம் என்பதால் இறைவனுக்கு திரு நோக்கிய அழகியநாதர் எனும் பெயர் வந்தது. இங்குள்ள மூலவருக்கு திங்கட்கிழமைகளில் துளசி அர்ச்சனை செய்கின்றனர்.
சமணர்களோடு சம்பந்தர் புனல்வாதம் நிகழ்த்தியபோது சமணர்களின் ஏடுகள் ஒதுங்கிய ஸ்தலம்.