சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமணக் காட்சியை காண காஞ்சிபுரம் வந்த ரிஷிகளும், முனிவர்களும் தத்தம் நித்ய பூஜா அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க அமைதியான இடம் தேடினார்கள். காஞ்சிபுரத்தில் கூட்டமாக இருந்ததால், சற்றுத் தள்ளி வந்து இத்தலத்தில் அமர்ந்து வழிபாடுகளை நடத்தினர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆறு ரிஷிகள் வெவ்வேறு இடங்களில் தங்கி பூஜைகளை மேற்கொண்டனர். இந்த ஆறு இடங்களை உள்ளடக்கிய வனப் பகுதிகளுக்கு ஷடாரண்யம் எனப் பெயர். தமிழில் ஆற்காடு என்பர்.
ஷடாரண்ய க்ஷேத்ரங்கள்:
வன்னிவேடு - அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியர், குடிமல்லூர் - அத்ரீஸ்வரர் - அத்ரி மகரிஷி,
நாவ்லாக் - காஸ்யபேஸ்வரர் - காஸ்யபர், காரை - கௌதமேஸ்வரர் - கௌதமர்,
வேப்பூர் - வசிஷ்டேஸ்வரர் - வசிஷ்டர், மேல் விஷாரம் - வால்மீகீஸ்வரர் - வால்மீகி,
புதுப்பாடி - பரத்வாஜீஸ்வரர் - பரத்வாஜர்.
சப்தரிஷிகள் ஸ்தாபித்து வழிபட்ட இந்த ஏழு சிவலிங்க மூர்த்தங்களையும், இந்த ஏழு ஸ்தலங்களுக்கும் சென்று, ஒரே நாளில் தொடர்ச்சியாக, சிவராத்திரி அன்று தரிசிப்பது புண்யமாகும். பாலாற்றின் வடகரையில் நான்கும், தென்கரையில் மூன்றும் உள்ளன.
இவைகளே ஷடாரண்ய க்ஷேத்ரங்கள் எனப்படும்.