உமையன்னையை வழிபடாமல், சிவபெருமானை மட்டும் வழிபடும் பிருங்கி முனிவர்க்கு அவருடைய தவறை உணர்த்த, தனது உடலின் இட பாகத்தைப் பார்வதிக்குத் தந்தார்.
லிங்க வடிவில் உள்ள ஸ்தலம் ரிஷிவந்தியம்.
சாவித்திரி மந்திரத்தின் நுட்பங்களை அறிந்து கொள்ள விரும்பிய இந்திரன், ரிஷிவந்தியத்தில் தங்கி, அம்பிகைக்கும் குடம் குடமாகப் பால் அபிஷேகம் செய்தான். அவனைச் சோதிக்க எண்ணிய பார்வதி, பால்குடத்தை மறைத்து வைத்தாள்.
வருத்தம் கொண்ட இந்திரனைச் சமாதானம் செய்து, மாதொருபாகனாக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், இருவருக்கும் சேர்த்துச் செய்த பலன் கிடைக்கும் எனக் கூறினாள் பார்வதி. சாவித்திரி மந்திர உபதேசமும் செய்தாள்.
இந்திரன் தொடர்ந்து பால் அபிஷேகம் செய்து வந்ததில் மகிழ்வுற்ற இறைவன் மாதொருபாகனாகத் தரிசனம் தந்தருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அகஸ்தியருக்குத் திருமணக் கோலமும், மாதொருபாகன் வடிவமும் காட்டியருளிய ஸ்தலம் இது. பூமிமாதேவியின் ஹிருதயகமலமாக விளங்கும் ஸ்தலம்.