பஞ்ச பாண்டவர்கள் திரௌபதியுடன் இவ்வூருக்கு வந்தபோது, 12 வருடங்களுக்கு ஒரு முறை காய்க்கும் மாங்கனி ஒன்றைக் கண்டனர். அதை பறித்து தரும்படி திரௌபதி வேண்டினாள். பீமன் அக்கனியை பறித்து திரௌபதியிடம் கொடுத்தான். அந்தக் கனி துர்வாசருக்குரியது என்பதை அறிந்து கொண்டதும் மிகவும் மனம் வருந்தி செய்வதறியாது திகைத்து, கண்ணனை அழைத்தனர்.
பறித்த மாங்கனியை திரும்பவும் மரத்திலேயே பொருத்தச் செய்தார் பகவான் கிருஷ்ணர் என ஸ்தல வரலாறு. துர்வாசரின் சாபத்திலிருந்து தப்பித்தனர் பாண்டவர்கள்.
தேவார வைப்புத்தலம்.