'பழு' என்றால் ஆலமரம். ஆலமரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஸ்தலம் என்பதால் பழுவூர் எனப் பெயர் கொண்டது. அன்னை தவமிருந்த இடம் என்பதால் இவ்வூரை யோகவனம் என்றும், அம்பாளை அருந்தவ நாயகி என்றும் கூறுவர்.
பரசுராமர் தன் தந்தையின் கட்டளைக்கிணங்க தனது தாயைக் கொன்றார். அந்தக் கொலைப்பழியும், தோஷமும் நீங்க, இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. கோயிலின் வாசலுக்கு முன்பாக பரசுராமரின் திருவுருவம் இடம் பெற்றுள்ளது.
இது பழுவேட்டரையர்களின் தலைநகரமாக இருந்ததாம். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்பார்கள்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்க பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்த அல்லது பிரியவிருக்கும் தம்பதியினர் இத்தலத்திற்கு வந்து சுவாமியையும் அம்பிகையையும் வழிபட்டால் ஒன்று சேர்வார்கள் எனக் கூறப்படுகிறது.
மேலப்பழுவூரில் விஷ்ணுவின் குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.