ஸ்தல வரலாறு
ஒரு காலத்தில் சனீஸ்வர பகவான் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகி பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார். தனக்கு தேவையானது போக மீதமுள்ள அன்னத்தை பசிப்பவர்களுக்கு தானம் செய்து வந்தார்.
ஒரு நாள் பிட்சைக்கு செல்கையில் விளா மர வேர் ஒன்று தடுக்கி பள்ளத்தில் விழுந்தார். பள்ளத்தில் ஞான தீர்த்தம் உற்பத்தியாகியது. அதில் அவர் மூழ்கினார். அவருக்கிருந்த ஊனம் போய்விட்டது.
பள்ளத்தில் விழும்போது "ஈஸ்வரா என்னைக் காப்பாற்று" என வேண்டியதால், அட்சய திருதியை, பூச நட்சத்திரம், சனிக்கிழமை கூடிய நாளில் இறைவன் பிரத்யட்சமாகி சனீஸ்வரனுக்கு அருள் புரிந்ததால், அந்நாளில் இவ்விறைவனை ஆராதிப்பவர்களுக்கு ஒரு கஷ்டமும் நேராது என ஐதீகம்.
அந்த ஒரு நாள் முழுவதும் சனீஸ்வரன் ஈஸ்வர பூஜையில் இருப்பதாக ஐதீகம். சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் குறைய இத்தலத்தில் வழிபட நன்மை பயக்கும்.
விளா மர வேர் தடுக்கி விழுந்த பள்ளத்தில் தீர்த்தம் உண்டானதால் விளாங்குளம் எனப் பெயர் பெற்றது.