அக்னி (கொள்ளி) வழிபட்டதால் கொள்ளிக்காடு எனப் பெயருற்றது. அக்னி வழிபட்டதால் மூலவரின் திருமேனி
சிவந்து காணப்படுகிறது. அக்னீஸ்வரரை வழிபட்டால் சனி தோஷம் விலகும். வினையால் வந்த துன்பங்கள்
நீங்கும் என்பர்.
நன்மைகளையே செய்யும் அனுக்ரஹ மூர்த்தியாக சனீஸ்வரர் இருக்கும் ஸ்தலம். நளனுக்கு விமோசனம் கிடைத்த
ஸ்தலம் திருநள்ளாறாக இருப்பினும், ராஜபதவி, செல்வங்கள், மனைவி - மக்கள் அனைத்தும் கிடைத்த ஸ்தலம்
கொள்ளிக்காடு என ஸ்தல வரலாறு கூறுகின்றது. சோழ மன்னன் திரிபுவன சக்ரவர்த்திக்கு சனிதோஷம்
விலகிய ஸ்தலம்.
சனீஸ்வரருக்கு கொன்றைப்பூ சாற்றி வழிபட்டால் குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை மேலோங்கும்.
ஊமத்தம்பூ சாற்றி வழிபட்டால் மனக்கவலைகள் தீர்ந்து மனம் அமைதி பெறும். வன்னி இலைகளால்
அர்ச்சித்தால் குபேர சம்பத்து கிடைக்கும்.
பொங்கு சனி ஸ்தலம் - தேவாரத்திருத்தலம்.