அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில் (அன்னியூர்)

Primary Deity
அக்னீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

அக்னி பகவான் புறா வடிவம் கொண்டு சிபி சக்ரவர்த்தியை சோதித்ததினால் ஏற்பட்ட பாபம் நீங்கவும், சிவபெருமானை அழையாது தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டதினால், வீரபத்ரரால் பெற்ற தண்டனையினால் ஏற்பட்ட சோர்விலிருந்து மீளவும், இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை அமைத்து பூஜித்து வழிபட்டார். இதனால் இவ்வூர் அக்னீஸ்வரம் என்றும் இறைவன் அக்னீஸ்வரர் என்றும் பெயர் பெற்றனர்.

காத்யாயினியாக இருந்த அம்பிகை, சிவபெருமானை மணக்க வேண்டி தவமிருந்த ஸ்தலம். அந்த எண்ணம் திருவீழிமழலையில் நிறைவேறுகிறது. திருமணத் தடை நீக்கும் ஸ்தலமாகவும், ரத்த அழுத்தம், உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியன போக்கும் ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.

தேவார திருத்தலம் - பாஸ்கர சக்தி ஸ்தலம்

மூலவர்: அக்னீஸ்வரர், அம்பாள்: கௌரி அம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அக்னீஸ்வரர். கௌரி அம்மை உடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...