அகஸ்தியர் தென்னகமெங்கும் பயணிக்கும்போது மக்களின் நன்மைக்காக ஆங்காங்கே சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். இந்த லிங்க மூர்த்தங்கள் அகஸ்தியரின் பெயராலேயே அகஸ்தீஸ்வரர் என வழங்கலாயிற்று.
இவ்விறைவனை கிளி ஒன்று பூஜை செய்து நற்கதி அடைந்ததால் கிளிக்குடி என பெயருற்று, நாளடைவில் மருவி கிள்ளியூர் என்றானது. சாண்டில்யனின் கடல்புறா எனும் நாவலில் இவ்வூர் இடம் பெற்றுள்ளது.
தேவார வைப்புத்தலம்.