பூமியை சமன் செய்ய வடக்கிலிருந்து-தெற்கு நோக்கி வந்த அகஸ்தியர், தென்திசை வரும்போது, நைமிசாரண்யத்திலிருந்து சிவலிங்கம் ஒன்று கொண்டு வந்தார். வழி நெடுக, அந்த லிங்கத்தை பூஜித்து வந்தார். திருவொற்றியூர் ஸ்தலம் வந்ததும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இறைவன் அகஸ்தியருக்கு, திருமணக் கோலத்தை காட்டியருளினார் என ஸ்தல வரலாறு.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (திருவொற்றியூர்)
மூலவர்: அகஸ்தீஸ்வரர், அம்பாள்: அகிலாண்டேஸ்வரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் அகஸ்தீஸ்வரர். அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கம். குபேர திசையான வடக்கு நோக்கி இருப்பது வாமதேவ ஈஸ்வர அமைப்பு. தலைவாசல் வடக்கு நோக்கி இருப்பதும், ஆவுடையார் வடக்கு நோக்கி இருப்பதும் தென்னாடு வந்த அகஸ்தியரை வரவேற்று அருள்பாலிக்கும் விதமாக அமைந்துள்ளது. அம்பாள் அகிலாண்டேஸ்வரி - அபய-வரத ஹஸ்தங்களும், பாசம்-அங்குசம் கொண்டும் சதுர்புஜங்களுடன் தரிசனம் தருகிறாள். ஓரடி முன்னே எடுத்து வைத்த திருவடியுடன் காணப்படுகிறாள். பிரகார கணபதி விசேஷமானவர். கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. சனி பகவான் அதிபதித்துவம் உள்ள ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.