காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
மாலை 5.30 மணி முதல் முன்னிரவு 7.30 மணி வரை
மட்டுமே கோவில் திறந்திருக்கும்.
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
மாலை 5.30 மணி முதல் முன்னிரவு 7.30 மணி வரை
மட்டுமே கோவில் திறந்திருக்கும்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார் அகஸ்தீஸ்வரர். சர்வாலங்கார பூரணமாக, தேஜோமயமாக காட்சி தரும் பாணலிங்கம். அகஸ்தியர் வழிபட்ட லிங்கம் என்பதனால் அகஸ்தீஸ்வரர் எனப் பெயர் கொண்டார். அழகே உருவாக நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றாள் ஆனந்தவல்லி. கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன.
பிரதான தெய்வங்கள் எல்லாம் கிழக்கு நோக்கிய சந்நிதிகளாக அமைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் சூரியனை நேருக்கு நேர் பார்ப்பது போன்ற அமைப்பில் சூரியன் கோவில் கொண்டுள்ளார்.
வாதாபி கணபதியின் தோற்றத்தில் தரிசனம் தரும் ராஜ கணபதி அழகாக இருக்கின்றார். தேவமயில் மீதமர்ந்த முருகன் காட்சி தருகின்றார். தேவ மயில் இங்கு மட்டுமே உள்ளதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார். வள்ளி - தெய்வயானை தேவியர்களுடன் உள்ளனர். விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார்.
மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சூரிய பகவான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இந்த ஆலயம் சூரியனின் ஆதிக்கத்தில் உள்ளது.
இவ்வாலயத்தின் விசேஷ மூர்த்தமாக எழுந்தருளியுள்ள பைரவர் மிகுந்த வரப்ரசாதி எனப் போற்றப்படுகின்றார். நந்திகேஸ்வரரின் பார்வைக்கு நேராக 15 துவாரங்களுடன் கூடிய பலகணி ஒன்று உள்ளது. இதை 12 ராசிகளாக கருதுகின்றனர்.
சென்னையிலுள்ள நவகிரஹ ஸ்தலங்களுள் ஒன்று - சூரிய ஸ்தலம்.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.