மோகினி அவதாரம் எடுத்த திருமால், அந்த அவதார நோக்கம் நிறைவேறியதும், இவ்விறைவனை வழிபட்டு தன் ஆண் வடிவினைப் பெற்றார் என ஸ்தல வரலாறு. முருகப் பெருமான் இத்தலத்தில் தனது பெயரால் தீர்த்தம் ஒன்றை அமைத்து, சிவபெருமானை வழிபட்டுள்ளார். வேள் வழிபட்டதால் வேளுர் எனப்பட்டது. தவிர பெருவேள் என்ற அரசன் ஆட்சி செய்துள்ளான்.
ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் போட்டி நடந்த ஸ்தலம். அந்த சண்டையில் பிளக்கப்பட்ட கயிலாய மலையின் ஒரு துண்டு இங்கே விழுந்து, சுயம்பு லிங்கமாக உருவெடுத்தது என்பர்.
தான் கொண்ட சாபத்திலிருந்து விடுபட எண்ணிய சுக்ராச்சாரியார் இத்தலம் வந்து சரவணப் பொய்கையில் நீராடி, அம்பிகையை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். இதனால் சுக்கிர நீச பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.