ஞானரூபியாய் விஸ்வரூப தரிசனம் தரும் ஆஞ்சநேயரை, விடியற்காலை 4.30 மணிக்கு, நிர்மால்ய தரிசனத்தில் சேவிக்கலாம். கோ பூஜை, நித்ய ஆயுஷ் ஹோமம், வேத பாராயணம் அனைத்தும் சிறப்புற நடக்கின்றன.
அபிஷேக ஆராதனைகளை - கோசாலையின் பசும்பாலைக் கொண்டும், அஷ்டாங்க திரவியங்களைக் கொண்டும், லிப்ட் சிஸ்டத்தின் உதவியோடு செய்கின்றனர். பல்லாயிரக் கணக்கான மொறு மொறு மிளகு வடைகளை மாலையாகக் கோத்து, கழுத்திலிருந்து பாதம் வரை அணிவிக்கின்றனர்.
சடாரி சாத்தும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
பல விதமான நைவேத்யங்கள் செய்து சமர்ப்பித்து, திருப்பதியில் விநியோகிப்பதைப் போலவே, இங்கும் காலை முதல் இரவு வரை சேவார்த்திகளுக்கு பிரசாதங்கள் விநியோகிக்கின்றனர்.
இங்கு உண்டியல் வைக்கப்படவில்லை. காணிக்கைகள் கோவிலுக்கே போய்ச் சேரும்.