திருப்பெருந்துறையில் அருவுருவமாக காட்சி தரும் ஆத்மநாதரை வழிபடும்போது, தாங்கள் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட மூர்த்தி வேண்டும் என பக்தர்கள் கேட்டுக் கொண்டதால் இங்கு லிங்க வடிவமாக எழுந்தருளியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
மாணிக்கவாசகர் காலத்திற்கு முன்பே இக்கோயில் இருந்ததால் ஆதி கயிலாயநாதர் என்கின்றனர். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக் காட்சி தந்த ஸ்தலம்.