ராஜநாராயண சதுர்வேதி மங்கலம், முன்னூற்று மங்கலம் என்ற பெயர்களைக் கொண்டிருந்த பழமையான கிராமம்.
மிகுந்த செருக்குடன் இருந்த பிரஹஸ்பதி, தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள, நாரதரின் யோசனைப்படி,
இங்கு ஆலயம் எழுப்பி வழிபட்டதாக வரலாறு. ஜாதகத்தில் குரு பகவானின் அருள் இல்லாதவர்கள், இத்தலம் வந்து
இவ்விறைவனை வழிபட்டால், குரு பகவானின் ஆசி கிடைக்கும் என ஐதீகம்.
தாருகாவனம் என்றும் பூலோக கைலாசம் என்றும் போற்றப்படும் இத்தலத்து இறைவனை பல மகரிஷிகள் பூஜித்துள்ளனர்.
பார்வதி தேவியார் தானே லிங்கத் திருமேனியை அமைத்து வழிபட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.