அருள்மிகு சஞ்சீவராயர் ஆஞ்சநேயப் பெருமாள் திருக்கோவில் (ஐயங்கார்குளம்)

God Name : ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவாரூர்

Call : +91-

ஆஞ்சநேயர், சஞ்சீவ மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு பறக்கும்போது கீழே விழுந்த ஒரு துண்டு உள்ள பகுதியில் இந்த ஆலயம் உள்ளதால், சஞ்சீவராய ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்டார். நெட்டூர் ஸ்ரீ லட்சுமி குமார கோடி கன்னிகாதான தாத்தாச்சார்யார் என்பவர் விஜயநகர சமஸ்தானத்தில் மந்திரியாக இருந்தவர். ஆலய பணிகளுக்கான தொண்டில் பொருளுடன் இத்தலம் வழிசென்றவர், இத்தலத்தில் இரவு தங்க நேரிட்டது. இவரிடமிருந்த பொருட்களை அபகரிக்க கொள்ளையர்கள் திட்டமிட்டனர். இதை தெரிந்து கொண்ட தாத்தாச்சார்யார் ஹனுமனை பிரார்த்தித்துக் கொண்டார். இவரையும் இவர் வைத்திருந்த பொருட்களையும் ஹனுமன் காத்து ரட்சித்தார். இதனால் மகிழ்ந்த தாத்தாச்சார்யார் இக்கோவிலைக் கட்டியதாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
மூலஸ்தானத்தில் ஆஞ்சநேயப் பெருமான் கூப்பிய கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். எதிரே ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணன் விக்ரஹங்கள் உள்ளன. வெளிச்சுற்றில் புடைப்பு சிற்பமாக தரிசனம் தரும் பெரிய திருவடியை சேவிக்கலாம். ஆறடி உயரம் கொண்ட அழகிய திருவுருவம். விதவிதமான தோற்றங்களில் மண்டபத் தூண்களில் காணப்படும் ஹனுமனின் 85 வடிவங்கள் அழகாக இருக்கின்றன. நுழைவாசலின் முகப்பில் கஜலட்சுமி சிற்பம் அழகாக இருக்கின்றது. படிக்கட்டுக்கள் இறங்கி உள்ளே சென்றால், கீழ்ப்படியை ஒட்டி இடுப்பளவு தண்ணீர். அதை தாண்டி தண்ணீர் இல்லாத பிரகாரம். பதினாறு கால் மண்டபம், நடுவே பாதாளக் கிணறு என கட்டிடக்கலைக்கு உதாரணமாக விளங்குகிறது. பெரிய ஏரியும், கருங்கற்படிகளுடைய நீர் வற்றிய குளமும், அதை ஒட்டியுள்ள நடைவாவிக் கிணறும் கலை அம்சம் கொண்டவை. விஜயநகர அரசர்கள் காலத்து கட்டிடக்கலை என்பர். (1 கி.மீ தொலைவில் நடவாவி உள்ளது.)
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.