அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில், காஞ்சி

God Name : வழக்கறுத்தீஸ்வரர்

அருணாசலேஸ்வரர் கோவில்

Call : +91-

'ஸத்' மற்றும் 'அஸத்' எனும் இரு சொற்களுக்குப் பொருள் கொள்வதில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் தர்க்கம் செய்யலாயினர். அதன் உண்மையான பொருளை அறிந்து கொள்ள சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர். இவர்களின் பிரச்சனையைத் தீர்த்து வைத்ததால், இறைவன் வழக்கறுத்தீஸ்வரர் என்ற திருநாமத்தைப் பெற்றார். விஸ்வாமித்ரர், சுதாகன் என்னும் அசுரனை ஏவி வசிஷ்டரின் 100 பிள்ளைகளையும் விழுங்கச் செய்து விட்டார். வசிஷ்டரின் மூத்த மகள் அதிர்சந்தினியின் மகனே பராசரன். பராசரர் பெரிய வேள்வி ஒன்றை செய்து அசுரர்களை அழித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. 16 வாரங்கள் திங்கட்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் நியாயமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் வழக்கறுத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பதினாறு பட்டைகளுடன் கூடிய அழகிய லிங்கத்திருமேனி. இதை ஷோடஸ லிங்கம் என்பார்கள். மற்றொரு பிரதான சன்னிதியில் பராசரேஸ்வரர் எனும் லிங்க வடிவத்தை தரிசிக்கலாம். பராசர முனிவர் பூஜித்து வழிபட்ட லிங்கம் என்பதால் பராசரேஸ்வரர் என்ற பெயர் பெற்றது. விநாயகர், வள்ளி - தேவசேனா தேவியர்கள் சமேத முருகன், சிவாலய கோஷ்ட தெய்வங்கள் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். பச்சையப்பன் சாலை மேட்டுத்தெரு வழியே சென்றால் வரும் கருக்கினில் அமர்ந்தாள் கோவிலில் காலராத்ரி துர்க்கையை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.