விழுதுகளுடன் கூடிய பத்து ஆலமரங்கள் நிழல் தர, பசுமையான இயற்கை சூழல் மிகுந்த குன்றின் அடிவாரம்
உள்ள கிராமமான பெருங்கரணையில் 120 படிக்கட்டுக்களுடன் கூடிய குன்றின் மீது அமைந்த ஆலயம்.
வாகனங்களில் செல்ல பாதை வசதியும் உண்டு.
குன்றின் அடிவாரத்துப் படிகள் தொடங்குமிடத்தின் இருபுறங்களிலும் இடும்பனும்;, ஆஞ்சநேயரும் தரிசனம்
தருகின்றனர;. அடுத்து வரும் மண்டபத்தில் சித்தி விநாயகர; ஒரு புறமும், கனகா தேவியான ராஜ ராஜேஸ்வரி
மறு புறமும், மற்றும் நவகிரகங்களையும் தரிசிக்கலாம்.
சரவணப் பொய்கையும் அதன் கரையில் கார;த்திகைப் பெண்களும் - முருகனும் ஆறு வடிவங்களில் அழகிய
சுதைச் சிறபங்களாக இடம் பெற்றுள்ளனர;. அருகே சிவபெருமான் காட்சி தருகின்றார;.
அரசு/வேம்பு பிணைந்த விருட்சமும் நாகப் பிரதிஷ்டைகளும் உள்ளன.
மூலஸ்தானத்தில் மூலவராக தண்டாயுதபாணி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார;.
அழகிய மரகதப் பச்சை திருமேனி கொண்டுள்ளார;. நடுப் பழனி நாயகர; என்று போற்றுகின்றனர;.
கல்யாண உத்ஸவராக வள்ளி-தெய்வயானை உடனாய முருகன் தரிசனம் தருகின்றார;. ருத்ராட்ச பந்தலின்
கீழ் மயில் மேல் ஆறுமுகன் எழுந்தருளியுள்ளார;.
பிரகாரத்தில் நாகப்படுக்கையில் எழுந்தருளியுள்ள நாக தத்தாத்ரேயர; விசேஷமானவர;. அநக அம்மன்
உடன் இருக்கின்றார;. விநயாகர;, லக்ஷ்மி போன்ற மூர;த்தங்களை தரிசிக்கலாம்.