ராவணனையும் அவனது படைகளையும் அழித்துவிட்டு ஜானகியை சிறை மீட்டு திரும்பிய ஸ்ரீ ராமர், சேதுக் கரையில் லிங்கம் அமைத்து வழிபட்டார். அப்போது பிரத்யட்சமான சிவனடியார்க்கு ஏற்படுத்திய துன்பம் காரணமாக கொண்ட தோஷங்கள் நீங்க, காஞ்சி மாநகர் வந்து, லிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என ஸ்தல வரலாறு. ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை செய்து பூஜித்ததால் இவ்விறைவன் ராமநாதேஸ்வரர் என்றழைக்கப்படுகின்றார். இத்தலம் சேதுவை விட முக்கிய ஸ்தலமாக கருதப்படுகின்றது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார் ராமநாதேஸ்வரர். துவார கணபதி வல்லபை கணபதியாக தமது பத்து கரங்களில் - மாதுளம்பழம், கதை, கரும்பு, வில், சங்கு, சக்கரம், பாசம், நீலோற்பலம், நெற்கதிர், ரத்ன கலசம் இவைகளைக் கொண்டும, சர்ப்ப ஆபரணங்களை தரித்தும், தரிசனம் தருகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.