அருள்மிகு காரகத்தான் திருக்கோவில், காஞ்சிபுரம்

God Name : ஸ்ரீ கருணாகரப் பெருமாள்

Call : +91-

அக்ராயர் எனும் மன்னன் வெம்மை நோயால் அவதியுற்றான். ஒரு பெரியவரின் ஆலோசனைப்படி இத்தலத்திற்கு வந்து, திருக்குளத்தில் நீராடி, கருணாகரப் பெருமாளை வழிபட்டான் என்றும், அவரது கடாட்சத்தால் மழை பொழிந்து, குளிர்ச்சியடைந்து குணமடைந்ததாகவும் ஸ்தல வரலாறு விளக்குகிறது. பெரியவராக வந்து வழிகாட்டியவர் பெருமாளே என்பதையும் அவன் உணர்ந்துகொண்டதாக ஸ்தல வரலாறு மேலும் விவரிக்கிறது. உண்மையான பக்தியை மட்டும் பக்தர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு கருணை காட்டுவதால் கருணாகரப் பெருமாள் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. கார்ஹ மகரிஷி, கருணாகரப் பெருமாளை வேண்டி நீண்ட தவம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு பிரத்யட்சமானதால், இத்தலம் முனிவரின் பெயரால் கார்ஹகம் என்றழைக்கப்பட்டு, பின்னர் காரகம் ஆனதாகக் கூறுவர். கார்ஹ முனிவருக்கு ஞானத்தை வழங்கியதால், இந்த பெருமாளை சேவிப்பவர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்குவார்கள் என ஐதீகம்.
மூலவர்: ஸ்ரீ கருணாகரப் பெருமாள்் தாயார்: ஸ்ரீ பத்மாமணி நாச்சியார். மூலஸ்தானத்தில், திருக்காரகத்தான் எனப்படும் ஸ்ரீ கருணாகரப் பெருமாள், வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவர் காரகத்தான் எனப் போற்றப்படுபவர். கார்ஹ மகரிஷிக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். தாயார் ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் அழகு திருவுருவமாக காட்சி தருகிறார். ரமாமணி நாச்சியார் என்ற திருநாமமும் உண்டு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.