அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், அருங்குளம்
God Name : அகத்தீஸ்வரர்
காஞ்சிபுரம்
Call : +91-
தனக்கு என்று எந்த முக்கியத்துவமும் இல்லாததால்தான், தன்னை ராவணேஸ்வரன் சிம்மாசன படிகளில் போட்டு மிதிக்கின்றான் என வருத்தம் கொண்ட 'சனீஸ்வரர்', தானும் ராவணனைப் போல ஈஸ்வரன் பட்டம் பெற வேண்டும் என கயிலாயம் விரைகிறார்.
நீண்ட தவம் புரிந்துதான் ராவணனுக்கு ஈஸ்வரன் பட்டம் கிடைத்தது என நாரதர் மூலமாக அறிந்து கொண்டு, தானும் அவ்வாறே தவம் மேற்கொள்ள பூலோகம் வந்து, இந்த ஸ்தலத்தை தேர்ந்தெடுத்தார். இங்கு உள்ள ஒரு மண் குவியலுள் பாணலிங்கம் ஒன்று இருப்பதாக அசரீரி மூலமாக தெரிந்து கொண்டு, அதை வெளிக்கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து, வழிபட்டார்.
சனீஸ்வரரின் தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் பிரத்யக்ஷமாகி, அவர் கோரிய ஈஸ்வரப் பட்டத்தை தந்து ஆசி கூறினார்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் 'அகத்தீஸ்வரர்'. கிழக்கு பார்த்த சந்நிதி. 'சனீஸ்வரர்' ஸ்தாபித்து வழிபட்ட லிங்க மூர்த்தம்.
அம்பாள் 'காமாட்சி' தனி சந்நிதி கொண்டுள்ளார். அபய-வரத ஹஸ்தங்கள், பாசம்-அங்குசம் ஏந்திய கரங்கள் என சதுர்புஜங்களுடன் அழகு திருவுருவமாக தரிசனம் தருகின்றாள்.
'விசாலாட்சி' உடனாய 'காசி விஸ்வநாதர்', 'வள்ளி-தெய்வயானை' சமேத 'முருகப் பெருமான்', 'பைரவர்', 'சூரியன்', 'தக்ஷிணாமூர்த்தி', 'சண்டிகேஸ்வரர்' ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இரட்டை நந்திகளை 11 முறை பிரதக்ஷிணம் செய்து வழிபட்டால், வழக்குகளில் தடை, வியாபாரத்தில் தடை, திருமணத்தடை ஆகிய தடைகள் நீங்குகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.