அருள்மிகு ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோவில் (நெமிலி)

Primary Deity
மூலவர்: ஸ்ரீ வைகுண்டப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீ வைகுண்ட வாசர்
Temple Type
ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

வீற்றிருந்த கோலத்தில் பெருமாளை தரிசிக்க ஆவல் கொண்ட நாரதரின் விருப்பத்தை நிறைவேற்ற, ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராய் பிரத்யட்சம் ஆனதாகவும், இதே கோலத்தில் இங்கேயே எழுந்தருள வேண்டி கோரிய நாரதரிடம், பக்தன் ஒருவனுடைய கனவில் தோன்றி, "இந்த ரூபத்தை சிலா வடிவமாக வடிக்கச் சொல்கிறேன்" என்று கூறியதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.

நல்ல விளைச்சல் கண்டால் பெருமாளுக்கு நெல் சமர்ப்பணம் செய்வதாக வேண்டிக் கொண்ட பக்தன் ஒருவன், மனம் மாறி, வேண்டுதலை நிறைவேற்றவில்லை. அவன் வைத்திருந்த நெல்மணிகள் அனைத்தும் நெல்மலையாக மாறின. தவறை உணர்ந்து பக்தன் மன்னித்தருள வேண்டியதால், விரல் இடுக்கில் நெல் வைத்துக் கொண்டு காட்சி தந்ததாக ஸ்தல வரலாறு.

நெல்மலை என்பதே நாளடைவில் மருவி நெமிலி என்றானதாக கூறுகின்றனர்.

மூலவர்: ஸ்ரீ வைகுண்டப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீ வைகுண்ட வாசர்.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் தரிசனம் தருகின்றார். சங்கு சக்ரதாரியாக, ஏழடி உயர திருமேனியுடன், சதுர்புஜங்கள் கொண்டு காட்சி அளிக்கின்றார். இடது கை விரல் இடுக்கில் ஒரு நெல்லைப் பிடித்துக் கொண்டு இருக்கின்றார். திருவடியின் கீழ் ஆதிசேஷனைக் காணலாம். திருமேனியில் வியர்வைத் துளிகள் அரும்பி உள்ளன. மானிடர்களின் கைகளில் உள்ளது போல் பெருமாளின் கரத்தில் ரேகைகள் காணப்படுகின்றன. ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்கள் உடன் உள்ளனர்.

உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீ தேவி, பூதேவி சகித வைகுண்டவாசர் சேவை சாதிக்கின்றார். நித்ய கல்யாணப் பெருமாள் என்றும் கூறுவர்.

வேணுகோபாலன் மற்றும் சக்கரத்தாழ்வாரை தனித்தனி சன்னிதிகளில் சேவிக்கலாம். ஐந்து தலை நாகம் மீது நடனமாடும் காளிங்க நர்த்தனன் விக்ரஹம் அழகாக இருக்கின்றது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...