சிரகிரி என்பதன் தமிழ்ச் சொல்லே தலைமலை. 850 அடி உயரம் கொண்ட மலை. ஒரு மனிதன் மல்லாந்து படுத்திருந்தால் அவனது தலை மற்றும் முகம் எப்படி இருக்குமோ, அவ்வாறே தோற்றம் அளிக்கிறது தலைமலை. ராவண வதம் முடித்து சீதையுடன் திரும்பிக் கொண்டிருந்த ஸ்ரீ ராமர் இம்மலைக்கு வந்து ராமர் சுனை என்னும் தீர்த்தம் ஒன்றை அமைத்தார் எனக் குறிப்பொன்று கூறுகிறது. சனி தோஷம் கொண்ட யமன் இந்த தீர்த்தத்தில் நீராடி வெங்கடவனை வழிபட்டார் என தல வரலாறு. ஹனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையை எடுத்த இடத்தில் கொண்டு போய் போடும்படி ஜாம்பவான் கூறியதாகவும், ஹனுமன் தனது வாலால் மலையைக் கட்டி வீசி எறிந்ததில் சிதறுண்டு விழுந்த பகுதியே தலைமலை என்றும் தல வரலாறு கூறுகிறது. மூலிகைகள் நிறைந்த மலை. விஷ ஜந்துக்கள் தீண்டாத தலம். ராமர் சுனை, கன்னிமார் சுனை ஆகிய வற்றாத சுனைகள் இங்கு உள்ளன. கன்னிமார் சுனையில் நீராடினால் சனி தோஷம் நீங்கப் பெறுவர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புரட்டாசியில் இடி பூஜை நடக்கும். அப்போது கோயில் கட்டடத்தில் விரிசல் ஏற்படுவதும், பெருமாள் கிருபையால் ஒன்று சேர்வதும் அதிசய நிகழ்வுகளாகும்.
அருள்மிகு ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் (தலைமலை)
Primary Deity
ஸ்ரீ வெங்கடாசலபதி
Temple Type
திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில்
Location
மதுரை
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ வெங்கடாசலபதி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தானாக வளர்ந்த நல்லேந்திரப் பெருமாளை தரிசிக்கலாம். பாமா - ருக்மணி சகித ஸ்ரீ கிருஷ்ணர், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஸ்ரீ விநாயகர், சஞ்சீவிராயர், கருப்பண்ணசாமி ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.